ஹரியின் புத்தகத்தால் மன்னர் சார்லஸ் பீதியடைந்துள்ளார்.
பிரித்தானியாவின் மகாராணியான இரண்டாம் எலிசபெத் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் புதிய மன்னராக பொறுப்பேற்றார். இந்நிலையில் சார்லஸ் எப்பொழுதும் தன்னைப் பற்றிய சில ரகசியங்களை புதைத்து வைக்க விரும்புவார். இது குறித்து ok Magazine அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிரித்தானியாவின் புதிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது இளைய மகன் இளவரசர் ஹரியின் நினைவு குறிப்பு புத்தகம் குறித்து வீதி அடைந்துள்ளார். ஏனென்றால் தன்னைப் பற்றிய சுவாரசியமாக இருக்கும் சில கதைகள் பகிரங்கப்படுத்தலாம் என அவர் அஞ்சுவதாக கூறப்படுகிறது. அரசு குடும்பத்தின் இருண்ட ரகசியங்கள் நிறைந்த ஒரு அலமாரியின் திறவுகோலை ஆரி வைத்திருக்கிறார்.
என்பதை மன்னர் சார்லஸ் அறிவார். அவை அமல்படுத்தப்படாமல் சார்லஸ் ஒரு மோசமான தந்தை என்று அழைப்பது மிகவும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஹரி எதை கொட்டினாலும் இப்போது தனது ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அவர் அஞ்சுகிறார். மேலும் ராயல் எழுத்தாளர் கேட்டி நிக்கோல் ஹரியன் புத்தகம் அரசு குடும்பத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக கூறினார்.இந்நிலையில் இளவரசர் வரவிருக்கும் சுய சரிதை நிச்சயமாக அரசு குடும்பத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்துதல் மற்றும் மிகப்பெரிய கவலையாக இருக்கும் அது அரச வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூத்த அரசு ஆதாரங்கள் மற்றும் அரண்மனை உதவியாளர்களிடையே நிறைய கவலைகள் உள்ளது. ஏனென்றால் இந்த புத்தகத்தின் மூலம் அவர்களுக்கு என்ன எதிர்பார்க்க வேண்டும் என்று தெரியவில்லை என அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.