Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. திடீரென ஏற்பட்ட ‌” route தலை பிரச்சனை”…. அச்சத்தில் உறைந்த பயணிகள்….!!!!

ரயில்  நிலையத்தில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

வேளச்சேரியில் இருந்து அரங்கோணம் செல்லும் ரயிலில் மாநில கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த கல்லூரியில் படிக்கும் இருதரப்பை சேர்ந்த மாணவர்களும் மின்சார ரயிலில் பயணம் செய்துள்ளனர். அப்போது திடீரென அவர்களுக்கு இடையே ரூட் தலை பிரச்சினை காரணமாக  தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் ராயபுரம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றுள்ளது. இதனையடுத்து ரயிலில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கீழே இறங்கினர். பின்னர்  ரயிலில் இருந்த மற்றொரு தரப்பு மாணவர்களை  நோக்கி கற்களை  விசியுள்ளனர் . இதனையடுத்து ரயில் அங்கிருந்து கிளம்பியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மின்சார அபாய சங்கிலியை திடீரென பிடித்து ரயிலை இழுத்து நிறுத்தினர்.

பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அச்சமடைந்த பயணிகள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு ரயில்வே சார் வந்துள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனையடுத்து ரயில் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |