வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்திலுள்ள மேலகுட்டப்பட்டி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு செந்தாமரை என்ற மனைவியும், கனிஷ்கா, ஜீவா என்ற இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜாதகம் பார்த்தபோது ஜோசியர் நேரம் சரியில்லை என கூறியுள்ளார். இதனால் செந்தாமரை தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வருவதாக கிருஷ்ணமூர்த்தி தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் பெற்றோர் கிருஷ்ணமூர்த்தியை தேடி பார்த்த போது மற்றொரு வீட்டில் கிருஷ்ணமூர்த்தி தூக்கில் சடலமாக தூங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.