அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி உரிமையாளர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக பாறை கற்கள், எம்சாண்ட், ஜல்லி போன்ற கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீசார் தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அதிக பாரத்தில் எம்சாண்ட் மணலை ஏற்றி கேரளாவுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அதிக பாரத்துடன் வந்த 18 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளர்களுக்கு மொத்தம் 13 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.