Categories
மாநில செய்திகள்

“கடலுக்குள் பேனா வைக்க நிதி இருக்கும்” போனஸ் வழங்கும் மட்டும் பணம் இருக்காதா….? டிடிவி தினகரன் சரமாறி கேள்வி….!!!!!

தமிழகத்தில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என மொத்தம் 10 சதவீதம் போன அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் டிடிவி தினகரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அரசு நிறுவனம் சார்ந்த ஊழியர்களுக்கு 10 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கி இருப்பது ஏற்புடையதல்ல. கொரோனாவை காரணம் காட்டி இந்த ஆண்டும் திமுக அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. கடலுக்குள் பேனா வைப்பதற்கு திமுக அரசிடம் நிதி இருக்கும்போது கடமையைச் செய்யும் அரசு ஊழியர்களின் உரிமையான தீபாவளி போனசில்  கை வைப்பது எந்த விதத்தில் நியாயமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |