சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா வாக்குறுதி அளித்திருக்கின்றார். இந்த நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா சோலான் மாவட்டத்தில் உள்ள மாதா சோலினி கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேச பேரவை தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய போது ஹிமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் நடைபெறும் முதல் அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு அறிவிக்கப்படும். மேலும் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு நலன்களை பாதுகாக்க ஒரு லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல், இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் போன்றோர் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடி வியாழக்கிழமை ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா, சம்பா பகுதிகளில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்த நாளிலேயே அந்த மாநிலத்தில் பிரியங்கா பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.