திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர், அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அப்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற 4ஆம் தேதி திருச்சிக்கு வர இருக்கிறார். முதல்வருக்கு தற்போது உடல்நிலை சரியில்லை என்பதால், அவர் வருவதில் தாமதமாகலாம் எனவும் கூறி இருந்தார்.திருச்சி வரும் முதல்வருக்கு திமுக தொண்டர்கள் அனைவருமே உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
தமிழக கவர்னர் எதிர்க்கட்சி போல் செயல்படுகிறார். சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் ஊதி பாஜக பெரிதாக்குகிறார்கள். வெட்கத்தை விட்டு சொல்கின்றேன். தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள் என்ற ஒரு தகவலையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அது மட்டுமல்லாமல் அதிமுக பிளவு பட்டு இருக்கிறது. அதிமுகவை சேரவிடாமல் பாஜக செயல்பட்டு, எதிர்க்கட்சியாக வருவதற்கு முயல்கிறது என்ற கருத்தையும் அவர் பதிவு செய்தார்.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும். சட்டமன்ற தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ, அதே போல வருகின்ற பாராளுமன்ற தேர்தலும் வெற்றி பெற வேண்டும். கண்டிப்பாக நாம் வெற்றி பெறுவோம் என்று கூறுகின்றார்.