Categories
மாநில செய்திகள்

உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம்… பள்ளி கல்வித்துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்…!!!!

உயர்கல்வியை தொடராத மாணவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளி கல்வித்துறை கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, வறுமை, குடும்ப சூழ்நிலை, நிதி பற்றாக்குறையால் தமிழ்நாட்டில் 6,718 மாணவர்கள் உயர்கல்வியை தொடர முடியாத நிலை உள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக வரும் இருபதாம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2021- 2022 ஆண்டில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து உயர்கல்வி தொடராத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கான வழிகாட்டல் சிறப்பு முகாம் நடத்தப்பட வேண்டும் என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் போன்றவற்றை அளிப்பதற்கு எதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டும் ஆலோசனை மையம் உருவாக்கப்படுகிறது. இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு முறையாகக் கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள் நடத்தப்படும். மேலும் முன்னாள் மாணவர்களை கொண்டு அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு நெறிப்படுத்தும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |