Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு: அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% இட ஒதுக்கீடு….. தமிழக அரசின் முடிவு என்ன…..?

தனியார் தொழிற்சாலையில் இரவு காவல் காவலாளியாக இருப்பவரின் மகள் வர்ஷா. இவர் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவ படிப்பு ஆசையில் இருந்த நிலையில் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதால் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் துணை மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். கிரிட்டிக்கல் கேர் டெக்னாலஜி என்கின்ற படிப்பை படித்துக் கொண்டே இருமுறை நீட் தேர்வு எழுதி ஒரு முறை 210, 250 மதிப்பெண் எடுத்திருந்தார். அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால் தமிழக அரசின் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 7.5% ஒதுக்கிட்டை தனியார் பள்ளிகளுக்கு வழங்கியிருந்தால் தனக்கும் மருத்துவ இடம் கிடைத்திருக்கும் என்றும் தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கு அமல்படுத்த கோரி தமிழக அரசிடம் மனு அளித்தார். அந்த மனுவில் நடவடிக்கை எடுக்காத நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் அரசிடம் அளித்த மாணவி பரிசீலித்து மருத்துவ படிப்பில் தனக்கு ஒரு இடத்தை ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை நீதிபதி ஆர். சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் அரசு பிளீடர் முத்துக்குமார் ஆஜராகி, தனியார் பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய மனுக்களையும் இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு நீதிபதி சுரேஷ் சிறப்பித்த உத்தரவில்,‌ அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை இரு நீதிபதிகளை அமரவு நிராகரித்த நிலையில் மீண்டும் அதே நிவாரணத்தை கோர முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதே நேரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசுதான் நிதி உதவி செய்கிறது என்பதால், அங்கு படிக்கும் மாணவர்களுக்கும் வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள் அல்ல என்றும், அவர்களின் பொருளாதார சமூகநிலை என்பது அரசு பள்ளி மாணவர்களை போன்று தான் என்று குறிப்பிட்ட நீதிபதி, 7.5% இட ஒதுக்கீடு அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிப்பது குறித்த அரசு ஆய்வு செய்யலாம் என கருத்து தெரிவித்துள்ளது.‌இது முழுக்க முழுக்க நீதிமன்றத்தின் கருத்துஸதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இருந்தாலும் அரசின் கொள்கை முடிவுக்கு சமந்தப்பட்டது என்று விளக்கம் அளித்துள்ளார்.

Categories

Tech |