Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்துக்கு அடியில் படுத்து ரகளை செய்த வாலிபர்….. பரபரப்பு சம்பவம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து அரசு டவுன் பேருந்து கருங்காலக்குடி கிராமம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நத்தம்- மூன்றுலாந்தர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பேருந்தை வழிமறித்தார். அப்போது ஓட்டுநர் பேருந்தை நிறுத்திய உடன் வாலிபர் திடீரென அடிப்பகுதிக்கு சென்று டயருக்கு முன்னால் படுத்து கொண்டு ரகளை செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுனரும், கண்டக்டரும் கீழே இறங்கி வாலிபரை எழுந்து வருமாறு கூறியும் அவர் வரவில்லை.

இதுகுறித்து போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெளியே வர அடம் பிடித்த வாலிபரை பேச்சுவார்த்தை நடத்தி வெளியே வர வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் செங்குளம் பகுதியை சேர்ந்தவர் என்பதை தெரியவந்தது. குடிபோதையில் அவர் பேருந்துக்கு அடியில் படுத்து ரகளை செய்ததால் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |