ரயில் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் அன்பு குமரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பர்தீன்(14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக பனப்பாக்கம் ரயில்வே தண்டவாளம் அருகே சிறுவன் சென்று கொண்டிருந்தான்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயிலில் அடிபட்டு சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்ற மாணவனின் உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.