இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் பொறுப்பேற்று வருகின்றார். இந்த நிலையில் இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடன் வாங்கி அதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டது. இதற்கிடையே பிரதமரின் இந்த திட்டத்திற்கு சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது.
பிரதமர் லிஸ் டிரஸ் வரை குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ்டர்ஸ்க்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து பிரதமர் நீதி மந்திரி குவாசி குவார்டங்கை பிரதமர் பதவியிலிருந்து லிஸ்ட்ரஸ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளார். மேலும் புதிய நீதிமந்திரியாக ஜெர்மி ஹன்ட் என்பவரை நியமனம் செய்து செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.