இளம்பெண் கைக்குழந்தையுடன் கிணற்றில் தவறி விழுந்தார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு காடு பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன்மொழி(28) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் தேன்மொழி தங்களது தோட்டத்து கிணற்றுக்கு ஓரமாக கை குழந்தையுடன் நடந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனை அடுத்து தேன்மொழியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் தேன்மொழியை பத்திரமாக மீட்டனர். ஆனால் அவரது குழந்தை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. பின்னர் குழந்தையின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.