நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பர்ஹானா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற வித்தியாசமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த நெல்சன் வெங்கடேசன் தற்போது பர்ஹானா திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்.
இந்த படத்தில் சித்தன் ரமேஷ், கிட்டி, அனுமன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கதையை நெல்சனுடன் இணைந்து சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் உள்ளிட்டோரும் எழுதியுள்ளார்கள். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது.