Categories
உலக செய்திகள்

“இலங்கையில் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சல்”… அரசு தீவிர நடவடிக்கை…!!!!!!

இலங்கையில் பாதித்து வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இலங்கையில் மேற்கு மாகாணத்தில் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கண்டி, காலோ, யாழ்ப்பாணம், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் கடந்த வருடத்தை விட 300 மடங்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அதாவது கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 20,000 ற்கும் குறைவானவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் சுமார் 60,000 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அதிக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் 36 சுகாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் இருப்பினும் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் நோய் கண்டறிவதற்கான கருவிகள் கூட இல்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இலங்கை சுகாதாரத் துறைக்கு மேற்படி கருவிகளை வழங்கும் நிறுவனங்களுக்கு ஏராளமான தொகை பாக்கி வைத்திருக்கின்ற காரணத்தினால் அந்த நிறுவனங்கள் தற்போது கருவிகளை வழங்குவதில்லை என தெரிய வந்திருக்கிறது. இருப்பினும் நாடு முழுவதும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுகாதார அதிகாரி கூறியுள்ளார்.

Categories

Tech |