உக்ரைனுக்கு 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவி வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உக்ரைனில் நடைபெற்று வரும் போரில் ரஷ்ய இராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணிதிரட்ட உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டாலர்கள் ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் என கூறப்பட்டுள்ளது. மேலும் உக்ரைனின் பல நகரங்கள் மீது ரஷ்யா இந்த வாரம் 84 ஏவுகணைகளை ஏவி தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளது அதில் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என உக்ரைன் அரசு கூறியுள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைனுக்கு கூடுதலாக ராணுவ உதவியை அமெரிக்கா அனுப்பும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிலிங்கன் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உக்ரைன் மக்கள் தங்கள் சுதந்திரம் மற்றும் சுதந்திரத்தை அசாதாரண தைரியம் மற்றும் எல்லையற்ற உறுதியுடன் பாதுகாக்கின்றார்கள். உக்ரைன் மக்களுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம் என தெரிவித்துள்ளார் ஹிமாஸ் ராக்கெட் லாஞ்சர்கள், வெடி மருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் போன்ற கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் உக்ரைனுக்கு கூடுதலாக அனுப்பப்படும். இதன் மூலமாக அமெரிக்கா அதிபர் அரசாங்கத்தின் கீழ் மொத்தம் 18.3 பில்லியன் டாலர் அளவிற்கு ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்க அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.