தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகுமூலம் கடத்த முயன்ற 10 லட்சம் மதிப்பிலான உரத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்ட விரோதமாக படகுமூலம் உரம் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள ஒரு கடைக்கு லோடு ஆட்டோவில் இருந்து மூட்டைகளை ஏற்றிக் கொண்டு இருந்தார்கள்.
இதை பார்த்த போலீசார் அங்கே சென்று கொண்டிருந்தபோது மூட்டைகளை ஏற்றிக் கொண்டிருந்தவர்கள் தப்பித்து விட்டார்கள். உடனடியாக போலீசார் மூட்டைகளை சோதனை செய்ததில் 50 மூட்டைகளில் 1500 கிலோ உரம் பதுக்கி வைக்கப்பட்டது தெரிய வந்தது. இதன் மதிப்பு 10 லட்சம் என சொல்லப்படுகின்றது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடியில் இருந்து படகுமூலம் இலங்கைக்கு சட்ட விரோதமாக உரம் கடத்த முயன்றது தெரிந்தது. இதனால் போலீசார் லோடு ஆட்டோ, படகு, 1500 கிலோ உரம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள்.