ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் வெடி மருந்து கிடங்கு சேதம் அடைந்துள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்து தொடங்கியது. தற்போது வரை தாக்குதல் முடிவுக்கு வர வில்லை. இந்நிலையில் நேற்று உக்ரைனில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நகரங்கள் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பதில் உக்ரைன் விமானப்படை 25 ரஷிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கருங் கடலுக்கு அருகே கப்பல் கட்டும் மையம் மற்றும் துறைமுகம் மீது ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும், மைகோலாயின் தெற்கு நகரம் கடுமையான குண்டுவீச்சி தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது.
இது குறித்து ரஷியாவில் உள்ள பெல்கோரோட் பிராந்தியத்தின் கவர்னர் கூறியதாவது. இங்கு உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ரஷிய வெடி மருந்து கிடங்கை உக்ரைன் படையினர் நடத்திய தாக்குதலில் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.