Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜீவா…. எந்த படம் தெரியுமா….? வெளியான மாஸ் தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜீவா. இவர் சுந்தர் சி இயக்கத்தில் தற்போது காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் ஜீவா நடிக்கும் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நாகசைதன்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி செட்டி நாயகியாக நடிக்க, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு இளையராஜா உடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்நிலையில் வெங்கட் பிரபு மற்றும் நாகசைதன்யா கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் கர்நாடக மாநிலம் மாண்டியா கிராமத்தில் உள்ள மேலகோட் என்ற பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு 302 என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் ஜீவா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |