Categories
சினிமா தமிழ் சினிமா

அட! என்னப்பா சொல்றீங்க…. பிரபல கிரிக்கெட் வீரருடன் ஜி.பி முத்து இணைகிறாரா….? வெளியான புதிய தகவல்….!!!!

டிக்டாக் செயலியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஜி.பி முத்து. அதன் பிறகு youtube இல் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு ஜிபி முத்து ரசிகர்களை கவர்ந்தார். இதனால் ஜிபி முத்துவுக்கு பட வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் ஜி.பி முத்து சன்னி லியோன் நடிக்கும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜி.பி முத்து போட்டியாளராக களம் இறங்கியுள்ள நிலையில், அவருடைய நடவடிக்கைகளினால் முதல் நாளில் இருந்தே ஜி.பி முத்துவுக்கு ரசிகர்கள் பட்டாளம் பெருகத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஜிபி முத்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் ஒரு புதிய படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹர்பஜன் சிங் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டிக்கிலோனா மற்றும் பிரண்ட்ஷிப் போன்ற திரைப்படங்களில் நடித்தார். இந்த படங்களைத் தொடர்ந்து பிரண்ட்ஷிப் படத்தை எட்டிய ஜான் இயக்கத்தில் ஹர்பஜன்சிங் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஜிபி முத்து ஒரு முக்கிய இடத்தில் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |