நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. இந்நிலையில் கோத்திமுக்கு ஆதிவாசி கிராமத்தில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இதனை அடுத்து கன மழைக்கு தாக்குபிடிக்காமல் இவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமானது. இதுகுறித்து அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். இதனை அடுத்து அதிகாரிகள் பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4100 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
Categories
இடி மின்னலுடன் கூடிய கனமழை…. இடிந்து விழுந்த வீடு…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு….!!!!
