நில மோசடி செய்த 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழ்குளம் வாழவிளை பகுதியில் மரிய ரத்தினபாய் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மரிய ரத்தினபாய்க்கு சொந்தமான இடத்தை அபகரிக்கும் நோக்கத்தில் அதே பகுதியில் வசிக்கும் லாரன்ஸ், மேரி ஆகியோர் கீழ்குளம் கிராம நிர்வாக அலுவலரின் அலுவலக முத்திரையை போலியாக தயார் செய்து, கையெழுத்து போட்டு அனுபவ சான்றிதழ் தயாரித்தனர். இதனை அடுத்து அந்த சான்றிதழை பயன்படுத்தி சார்- பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 29-ஆம் தேதி லாரன்சும், மேரியும் மரிய ரத்தினபாயின் இடத்தை தங்களது பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து சப்-கலெக்டர் அலுவலகத்தில் மரிய ரத்தினபாய் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடத்தியதில் கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக போட்டு பத்திரப்பதிவு செய்தது உறுதியானது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் லாரன்ஸ் மற்றும் மரியா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.