இலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக்சே பிரதமராக வாய்ப்பு இருக்கிறது என்று மந்திரியான லோகோன் ரத்துவதை கூறியிருக்கிறார்.
நிதி நெருக்கடி இலங்கை நாட்டையே மொத்தமாக புரட்டிப் போட்டது. இதனால், மக்கள் பணியிழப்பை சந்தித்ததோடு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, அதிகபட்சமான விலை ஏற்றம் என்று கடுமையாக பாதிப்படைந்தார்கள். மேலும் அரசாங்கத்தை எதிர்த்து தீவிரமாக போராட்டம் நடத்தினர்.
எனவே, அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோட்டபாய ராஜபக்சே இருவரும் ராஜினாமா செய்தனர். எனவே, அதிபராக ரணில் விக்ரமசிங்கேவை தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில், மீண்டும் மஹிந்த ராஜபக்சே பிரதமராகலாம் என்று மந்திரியாக இருக்கும் லோகோன் ரத்துவதை கூறியிருக்கிறார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவை மக்கள் அதிகம் எதிர்த்ததால் அவர் சிறிது விலகி உள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மக்கள் போராடவில்லை. எனவே, பிரதமராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதில் பிரச்சனை இல்லை. நாடாளுமன்றத்தில் தகுந்த முறைப்படி தேர்தல் நடக்கும் பட்சதில் அவர் பிரதமராக வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.