Categories
மாநில செய்திகள்

தீபாவளிக்கு சரவெடி பட்டாசுக்கு தடை….. மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!!

நாட்டில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகை என்றாலே அது தீபாவளி தான். தீவாளி பண்டிகை முன்னிட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகள் வெடித்து சிறப்பாக கொண்டாடுவார்கள்.‌ நடப்பு ஆண்டில் தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு வியாபாரிகள் போன்றோர் பின்வரு உச்சநீதிமன்றத்தின் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

அதிக ஒலி எழுப்பு வெடிகள் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் சரவெடி பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. பட்டாசு விற்பனை உரிமம் பெற்ற வணிகர்கள் மூலமாக மட்டுமே இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட ரசாயனங்கள் கொண்ட பட்டாசுகளை மட்டுமே அனைத்து மத பண்டிகைகள் போது மற்றும் திருமண நிகழ்வுகளில் போது பயன்படுத்தப்பட வேண்டும். அதனை தொடர்ந்து தடை செய்யப்பட்ட பட்டாசுகளை உற்பத்தி செய்பவர்கள் அல்லது விற்பவர்களின் உரிமைகள் ரத்து செய்யப்படும். பட்டாசுகளின் பயன்பாடு கண்டிப்பாக உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டுதன்படி இருத்தல் வேண்டும். தீபாவளி அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 7 மணி முதல் 8:00 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்கலாம். உச்சநீதிமன்றத்தில் இந்த உத்தரவுகளை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட நிர்வாக சார்பாக வலியுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |