சின்னத்திரை சீரியல் நடிகர்களில் ஒருவர் அர்னவ். இவர் தன்னுடன் கதாநாயகியாக நடித்த நடிகை திவ்யாவை காதலித்து திருமணம் செய்தார். தற்போது இவர் புதிய தொலைக்காட்சி சீரியலில் நடித்து வருகிறார். இதில் இவருடன் நடிக்கும் கதாநாயகியுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக சில வாரங்களுக்கு முன்பிருந்தே கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். மேலும் கர்ப்பிணியான தன்னை அர்னவ் தாக்கியதாக திவ்யா போலீஸிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த மகளிர் போலீசார், கொலை மிரட்டல், வன்கொடுமை போன்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்தனர்.
நடிகர் அர்னவ்வை போலீசார் விசாரணைக்கு ஆஜராகும் படி கூறியும் ஆஜராகாமல் இருந்தார். இதனையடுத்து, இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு அர்னவ் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளதால் 18ஆம் தேதி ஆஜராக இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில், இவர் படபிடிப்புத்தளத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை சிறையில் அடைக்கும் பணிகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.