இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.நடப்பு ஆண்டு முதல் காலாண்டில் மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நான்கு சதவீத மகள விலை பணியை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது .இந்நிலையில் ஊழியர்களின் நலனை கருதி மத்திய அரசு ஊழியர்களின் அகலவிலைப்படி உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ள நிலையில் அகலவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியானது.
அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகலவிலைப்படி நான்கு சதவீதம் அதிகரிக்கப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகலவிலைப்படி 2022 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முன் தேதியிட்டு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி தரும் செய்தியாக ரயில்வே துறை ஊழியர்களுக்கு தீபாவளி போன அறிவிப்பு வெளியாகி உள்ளது.அதன்படி ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கு சமமான உற்பத்தி திறனுக்கான ஊதியத்தை தீபாவளி போனஸ் ஆக வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது