Categories
சினிமா

குட்டி மருமகளுடன் செய்தித்தாள் வாசிக்கும் பிரியங்கா…. வெளியான வைரல் புகைப்படம்….!!!!

பிரபல தொகுப்பாளினியாக வலம்வரும் பிரியங்கா பிக்பாஸ் சீசன் 5-ல் பங்கேற்று மக்கள் மனதை கொள்ளைகொண்டார். அதுமட்டுமின்றி அந்த சீசனில் 2வது இடத்தையும் தட்டிச்சென்றார். இதுவரையிலும் பிரியங்கா தன் கணவரை குறித்து எந்த ஒரு விபரமும் வெளியிடாத நிலையில், அவ்வப்போது தன் மருமகளுடன் உள்ள புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். அதாவது தம்பி மகளுடன் பிரியங்கா பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அத்தையாக உள்ள பிரியங்கா தன் மருமகளை கீழே விடாமல் வைத்துக்கொண்டு தன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அண்மையில் ஓணம் பண்டிகைக்கு தன் மருமகளை வரவேற்று பயங்கர அலப்பறை செய்திருந்தார். இந்த நிலையில் தற்போது தன் மருமகளுடன் சேர்ந்து செய்தித்தாள் வாசிக்கும் கெத்தான புகைப்படத்தினை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த  ரசிகர்கள் மருமகள் நன்கு வளர்ந்துவிட்டாளே? என கூறியதோடு, வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |