Categories
தேசிய செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயார் : அதிபர் ட்ரம்ப்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் இன்று டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் டிரம்ப், 2 நாள் இந்தியப்பயணம் அருமையாக இருந்தது. எனக்கும் பிரதமர் மோடிக்கும் நெருங்கிய நட்பு உள்ளது என மகிழ்ச்சியாக கூறினார்.

இந்தியாவுக்கு ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெலிகாப்டர்கள் விற்பனை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றும் எரிசக்தி துறை தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் பாகிஸ்தானில் இருந்து வரும் பிரச்சனைகளை இந்தியா சமாளிக்கிறது, இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய நான் தயார் என கூறியுள்ளார்.

எந்த ஒரு பிரச்னைக்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் இந்தியா – பாகிஸ்தான் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தகவல் அளித்துள்ளார்.

பிரதமரிடம் மத சுதந்திரம் குறித்து பேசினேன், டெல்லி வன்முறை குறித்து பிரதமரிடம் எதுவும் பேசவில்லை, அது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை என கூறினார். மேலும் அமெரிக்கா உலக போலீஸ்காரன் அல்ல, பல நாடுகளில் இருக்கும் எங்கள் துருப்புகளை திரும்ப அழைப்போம் என் ட்ரம்ப் தகவல் அளித்துள்ளார். மோடியுடன் ஹார்லி டேவிட்சன் பைக்குக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பது குறித்தும், ஹெச்1-பி விசா விவகாரம் குறித்தும் பேசியதாக குறிப்பிட்டார்.

Categories

Tech |