Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலம் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணிக்கு ஆள் தேர்வு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை நிலவுவதால் அவை அனைத்தும் விரைவில் நிரப்பப்படும் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.இதனுடைய அது குறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என பலரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது.இதனை தொடர்ந்து அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி வரை புதிய ஆட்களை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.

இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் உத்தேசமாக காலியாக உள்ள 236 விற்பனையாளர்கள் மற்றும் 40 கட்டுடல் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் http://www.drbsim.in என்ற இணையதளம் மூலம் பயன்பெறலாம்.

Categories

Tech |