Categories
சினிமா தமிழ் சினிமா

அசத்தல் அழகில்… கியூட் சிரிப்பால் மயக்கும் பாவனா… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்…!!!!

பாவனா தமிழ், மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் சினிமாவிற்காக கார்த்திகா என்னும் தன் பெயரை பாவனா என மாற்றியுள்ளார். கடந்த 20 வருடங்களில் 80 படங்களில் நடித்திருக்கின்றார். மேலும் இவர் சிறந்த நடிகை சிறந்த துணை நடிகை எனும் கேரளா அரசின் மாநில விருது, பிலிம் பேர் விருது, ஏசிய நெட் விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழ் திரையுலகில் மிஷ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி என்னும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

 

முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார் இதனை அடுத்து வெயில் திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக பாராட்டுக்கள் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற திரைப்படங்கள் இவருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்று தந்ததுள்ளது. இந்த நிலையில் தற்போது இவரின் க்யூட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

Categories

Tech |