கஜகஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி, உக்ரைன் விவகாரத்தில் இந்திய நாட்டின் நிலைப்பாடு மிக சமநிலையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் முடிவடைய போவதாக தெரியவில்லை. இதனிடையே கஜகஸ்தான் நாட்டின் துணை வெளியுறவு மந்திரியான ரோமன் வாசிலென்கோ தெரிவித்ததாவது, இந்த வருட ஆரம்பம் முதல், இந்தியா சர்வதேச மன்றங்களில் தங்களின் கருத்தை தெரிவிக்கும் சமயங்களில் உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போர் தொடர்பில் மிகவும் சமநிலையாக இருக்கிறது.
ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய நாட்டின் நிலைப்பாடானது மிகவும் சமநிலையாக இருக்கிறது. இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகளிடையே மிகவும் நீளமான வரலாறு இருக்கிறது. இரு நாடுகளின் உறவில் மிகுந்த சுவாரஸ்ய வளர்ச்சியை கண்டிருக்கிறோம். இந்திய கலாச்சாரம் குறித்து கஜகஸ்தான் நாட்டில் பாராட்டத்தக்க வகையில் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு நாடுகளின் உறவை எந்த வகையில் பலப்படுத்துவது என்பது தொடர்பான, கஜகஸ்தான் நாட்டின் வெளியுறவு கொள்கையின் அணுகுமுறை மாறாமல் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.