தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனா மிகவும் பிரபலமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்ற பாடலுக்கு ராஷ்மிகா அசத்தலாக நடனமாடி இருப்பார். இந்த பாடலுக்கு பிறகு தான் ராஷ்மிகாவுக்கு பாலிவுட் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது. இவர் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதோடு நடிகர் கார்த்தியுடன் இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு ராஷ்மிகா ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் மாலத்தீவுக்கு சென்றிருக்கும் ராஷ்மிகா தற்போது பிகினி உடையில் படு ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார். மேலும் நடிகை ராஷ்மிகாவின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.