மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டையூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் தனியார் கல்குவாரி கிரஷர் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மதியம் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சரண்(20) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது.
இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.