இணைத்தளத்தில் தினசரி எண்ணிலடங்கா வீடியோக்கள் பகிரப்பட்டாலும் அதில், சில வீடியோக்கள்தான் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது. அதிலும் குறிப்பாக யானைகள் குறும்புசெய்யும் வீடியோக்களானது எளிதில் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஒரு யானை பானிபூரியை மிகவும் ரசித்து சாப்பிடும் வீடியோவானது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அசாமின் தேஜ்பூரிலுள்ள ஒரு சாலை ஓர கடையில் யானை ஒன்று பானிபூரியை ரசித்து சாப்பிடுவதைக் காணலாம். சிற்றுண்டியைத் தயாரித்து விற்கக்கூடிய அந்த விற்பனையாளரும் யானைக்கு அதை ஊட்டி விடுவதில் மகிழ்ச்சியடைகிறார்.
#viralvideo elephant eating a #Panipuri pic.twitter.com/OJ4Yp7tY40
— Siraj Noorani (@sirajnoorani) October 11, 2022
இந்த அரிய மற்றும் ஆச்சரியமான காட்சியைப் பார்த்து பலர் வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர். அந்த பானிபூரி விற்பனையாளருக்கு அருகே யானை நின்றுகொண்டு இருக்கிறது. இதனிடையில் விற்பனையாளர் யானைக்கு பானிபூரியை ஒவ்வொன்றாக ஊட்டிவிடுவதை நாம் பார்க்கலாம். அதே நேரம் யானைக்கு அருகே காவலர் ஒருவர் நிற்கிறார். சில தினங்களுக்கு முன் ஒரு யானை பொம்மைபோல ஒரு காரை சுழற்றி வீசும் காட்சி வைரலாகியது.