Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாயின் தலையில் கல்லை போட்டு…. கொடூரமாக கொலை செய்த 9-ஆம் வகுப்பு மாணவன்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

9- ஆம் வகுப்பு மாணவன் தாயை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சுங்ககாரன்பாளையம் பகுதியில் கட்டிட ஒப்பந்ததாரரான அருட்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராணி(36) என்ற மனைவி இருந்துள்ளார். இவர் புஞ்சைபுளியம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 14 வயதுடைய மகனும், 12 வயதுடைய மகளும் இருக்கின்றனர். இதில் மகன் சத்தியமங்கலத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வருகிறான். மகள் 6- ஆம் படித்து வருகிறார்.

கடந்த 4 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கூட விடுதியில் இருந்து வீட்டிற்கு வந்த சிறுவன் தனது தாயிடம் இனிமேல் பள்ளிக்கு செல்ல மாட்டேன் விடுதிக்கும் செல்ல மாட்டேன் என சண்டை போட்டுள்ளார். இதனால் பள்ளிக்கூடம் செல்லுமாறு யுவராணி தனது மகனை வற்புறுத்தியுள்ளார். மேலும் நாளை காலை அப்பா வந்ததும் இது குறித்து பேசிக் கொள்ளலாம் என யுவராணி மகனை சமாதானப்படுத்தியுள்ளார். பின்னர் இருவரும் இரவில் தூங்க சென்றனர். நேற்று அதிகாலை 2 மணி அளவில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த தனது தாயின் தலையில் சிறுவன் ஹாலோ பிளாக் செங்கல் மற்றும் பூந்தொட்டி ஆகியவற்றை தூக்கிப்போட்டு தாக்கியுள்ளார்.

இதனால் யுவராணியின் அலறல் சத்தம் கேட்டு எழுந்த சிறுமி கீழ்த்தளத்தில் வசிக்கும் தனது சித்தப்பா சிவசக்தியின் வீட்டிற்கு ஓடி சென்று அழுது கொண்டே அண்ணன் தாயை தாக்குவதாக தெரிவித்தார். இதனால் பதறியடித்துக் கொண்டு சிவசக்தி மேல் தளத்திற்கு வந்தபோது ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த யுவராணி மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே யுவராணி பரிதாபமாக இறந்துவிட்டார். இதற்கிடையே சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |