ஈரோடு மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் சத்தியமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் தகராறு செய்துள்ளார். அந்த வாலிபர் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்; நான் பெரிய ரவுடியாக போகிறேன், அரசு சொத்துக்களை அடித்து நொறுக்கினால் தான் அரசுக்கு நான் யார் என்பது தெரியும் என சினிமா பட பாணியில் சத்தம் போட்டபடி பொதுமக்களுடன் தகராறு செய்தார்.
அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்ததில் அவர் சிக்கரசன்பாளையம் பகுதியில் வசிக்கும் ரஞ்சித் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ரஞ்சித்தை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.