கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா, தந்தை மாணிக்கத்தின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றுள்ளது.
சென்னை பரங்கி மலையில் கல்லூரி மாணவி சத்யாவை 5 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் சத்யாவின் உடலையும், அதே நேரத்தில் தனது மகள் உயிரிழந்த காரணத்தினால் மனமுடைந்து மயில் துத்தம் என்ற விஷத்தை மதுவில் கலந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை மாணிக்கத்தின் உடலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.
குறிப்பாக இந்த பிரேத பரிசோதனை என்பது ஒரு மணி நேரத்துக்கு முன்பாக தொடங்கியது. அவரது உறவினர் சீனிவாசன் என்பவரும் காவலராக பணிபுரிந்து வருகிறார். அவர் நேரடியாக வந்து கையெழுத்திட்டத்தை அடுத்து பிரேத பரிசோதனை என்பது நடந்து தற்போது தான் இருவரது பிரேத பரிசோதனை முடிந்து, அதற்குண்டான அறிக்கை தயார் செய்யும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து தந்தை மாணிக்கத்தின் உடலையும், மகள் சத்யபிரியாவின் உடலையும் ஆலந்தூரில் இருக்கும் காவலர் குடியிருப்புக்கு அஞ்சலிக்காக அனுப்பப்பட இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். ஒருபுறம் தற்கொலை செய்து கொண்டது தொடர்பான வழக்கும், அதே நேரத்தில் மகள் கொலை தொடர்பான ஆதாரங்களையும் திரட்டும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ராமலட்சுமி என்பவர் ஆதம்பாக்கத்தில் குற்ற பிரிவில் தலைமை காவலராக இருந்து வருகிறார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குடியிருப்பில் தங்கி இருக்கிறார். அவர் வர முடியாததால் தான் சீனிவாசன் முன்பாக கையெழுத்திடப்பட்டு உடற்கூறு ஆய்வு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருவரதுஉடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், அதற்கான அறிக்கை என்பது தயார் செய்யப்பட்டு வருகிறது. இருவரின் உடலும் இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆலந்தூர் காவலர் குடியிருப்புக்கு கொண்டு செல்லப்படும்.. இதற்கிடையே காலை 12 மணி அளவில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயரதிகாரிகள் தலைமை காவலர் ராமலட்சுமிக்கு ஆறுதல் கூறிய நிலையில், உடன் பணியாற்றியவர்களும் தற்போது காவலர் குடியிருப்பில் இருந்து வருகின்றனர்..