பிரபல நாட்டில் விமான போக்குவரத்து அமைப்பின் சார்பில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
கனடாவில் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் சார்பில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து 184 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சேர்ந்த 2,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் பாதுகாப்பு, வழி செலுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பம் தொடர்பாக 56 தலைப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
இதனையடுத்து வருகின்ற 2050-ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விமானங்கள் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியீடு என்ற இலக்கை எட்டுவதற்கான வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு முதல் முறையாக நேரில் நடைபெற்ற உலக அளவில் சிவில் விமான போக்குவரத்து துறையின் மிகப்பெரிய கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.