Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி இது கட்டாயம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பள்ளமான பகுதிகளில் இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ரேஷன் கடைகளில் சேமித்து வைத்திருக்கும் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைகின்றன.

இந்நிலையில் இது தொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.அதாவது தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் நியாய விலை கடைகள் மற்றும் கிடங்குகளை உயர்வான பகுதிகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் அனைத்து கடைகளிலும் மெழுகுவர்த்தி, அரிசி, மண்ணெண்ணெய், அவசரகால விளக்கு, உப்பு மற்றும் தீப்பெட்டிகள் அனைத்தும் எப்போதும் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.

மழை காரணமாக நியாய விலை கடைகளில் சுவர் அல்லது மேற்கூரை சேதமடைந்தால் உடனடியாக மற்றொரு இடத்தில் கடைகளை அமைக்க வேண்டும்.மழைக்காலங்களிலும் நியாய விலை கடைகள் அனைத்தும் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க கட்டுப்பாட்டு வரை அமைக்க வேண்டும்.இந்த கட்டுப்பாட்டு அரைக்கால தொலைபேசி எண்ணை பொதுமக்கள் அனைவருக்கும் தெரியும் விதமாக அனைத்து நியாய விலை கடைகளிலும் ஒட்ட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |