Categories
உலக செய்திகள்

வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனையா…? லிஸ் ட்ரசுக்கு ஏற்பட்ட தலைவலி…!!!!!

வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இங்கிலாந்தில் புதிய பிரதமராகி உள்ள பெண் தலைவர் லிஸ் டிரஸ் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 23ஆம் தேதி வெளியான மினி பட்ஜெட்டில் 45 பில்லியன் பவுண்டு வரி குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது கடன் வாங்கி இதனை சரி செய்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இது நிதி சந்தைகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பிரதமர் லிஸ் டிரஸ் இந்த வரி குறைப்பு திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அவரது சொந்த கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் பின்வரிசை எம்பிக்கள் வலியுறுத்தி இருக்கின்றார்கள் இது தற்போது லிஸ்ட்ரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி அவருக்கு நெருக்கமான மந்திரி ஒருவர் பிபிசி அளித்த பேட்டியில் பேசியபோது நாம் முற்றிலும் ஒரு மோசமான நிலையில் இருக்கின்றோம்.

இதிலிருந்து வெளியேற வழி இல்லை ஒருவேளை லிஸ் டிரஸ் வழி கண்டுபிடிப்பார் ஆனாலும் என்னால் அதை பார்க்க முடியவில்லை என கூறியுள்ளார். இதனை முன்னிட்டு ரிஷி சுனக்கின் ஆதரவாளரான மெல் ஸ்ட்ரைட் கருத்து தெரிவிக்கும் போது நிதி சந்தைகளில் அரசு நம்பகத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் தெளிவான மாற்றத்தை காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஏப்ரல் மாதத்தில் மாநகராட்சி வரியை 19 சதவீதத்திலிருந்து 25% ஆக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் மற்ற வரி குறைப்புகள் வளர்ச்சிக்கு ஊக்கமாக அமையும் எனக் கூறுகிற பிரதமர் லிஸ் ட்ரஸ் சொந்த கட்சியில் தற்போது எழுந்துள்ள எதிர்ப்பை எப்படி கையாள போகின்றார் வரி குறைப்பு திட்டங்களை அவர் மறுபரிசீலனை செய்வாரா என்பது அங்கு தற்போது பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |