Categories
மாநில செய்திகள்

நாங்க தான் அதிமுக.! தேவர் தங்க கவசத்தை எங்களிடம் கொடுங்க….. “பசும்பொன் சென்ற முன்னாள் மாஜிக்கள்”….. ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி…!!

தேவர் தங்க கவசத்தை பெறுவதற்கான முயற்சிகளை இபிஎஸ் தரப்பு  மேற்கொண்டு வருகிறது. பசும்பொன் சென்று அறங்காவலரிடம் ஆதரவு கேட்கின்றனர்.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் நினைவு தினம், குருபூஜை அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறுவது வழக்கம். முத்துராமலிங்கத்தேவருக்கு தங்கக்கவசத்தை வைத்து ஆண்டுதோறும் மரியாதை செய்வது வழக்கம். இதற்கான தங்க கவசம் என்பது மதுரையில் இருக்கக்கூடிய வங்கியில் இருக்கும் நிலையில், அங்கிருந்து புறப்பட்டு அதிமுகவின் பொருளாளரால் பெறப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் அதிமுகவில் தற்போது பிளவு என்பது ஏற்பட்டு வழக்கு நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் அதிமுகவின் எடப்பாடி தரப்புக்கு நீதிமன்றம் தீர்ப்பு என்பது சாதகமாக பெறப்பட்ட நிலையில், அவர்கள் சார்பாக பொருளாதாரராக இருக்கக் கூடிய திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் வங்கியிடம் எங்களிடம் கவசத்தை வழங்க வேண்டும் என்ற மனு வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களிலேயே ஓபிஎஸ் ஆதரவாளர் தரப்பில் எங்களிடம் கொடுக்க வேண்டும் என இதுபோன்று  மனு வழங்கப்பட்டது. இதனால் குழப்படியான சூழலில் வங்கி தரப்பு இருந்து வருகிறது.

யாருக்கு எப்படி கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இன்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ராஜன் செல்லப்பா ஆகியோர் அதிமுகவின் பொருளாளர் சீனிவாசன் தலைமையில் சென்று கொண்டிருக்கிறார்கள்..ஆர்பி உதயகுமார் காலையிலே அங்கு சென்றுள்ளார். அதாவது தென் மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் அங்கு சென்றுள்ளனர்.

அவர்கள் சென்று அங்கே தேவர் நினைவிட அறங்காவலரை சந்தித்து அவரிடம் ஆதரவு கேட்கிறார்கள். தங்கக் கவசத்தை எங்களிடம் ஒப்படையுங்கள் நாங்கள் தான் அதிமுக, நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமாகத்தான் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆகவே எங்களிடம் வழங்க ஆதரவு கொடுங்கள் என தெரிவித்துள்ளனர். ஆதரவு கிடைத்த பின்பு நேரடியாக வங்கியில் பேசுவதற்கான அடிப்படை வாய்ப்பிருக்கிறது. இந்த முயற்சி ஓபிஎஸ் தரப்பிற்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

 

Categories

Tech |