சென்னை காமராஜர் சாலையிலுள்ள உயர்கல்வி மன்றம் வளாகத்தில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலைக்கு அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 17ம் தேதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்கு அனுமதி கேட்டு சென்னை சேப்பாக்கத்திலுள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு அளித்துள்ளார்.
இதையடுத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “வருகிற 17ம் தேதி அ.தி.மு.க சார்பாக ஜெயலலிதாவுக்கு மாலை அணிவிக்க அனுமதி அளிக்கவேண்டும் மற்றும் அதனை சரிசெய்து கொடுக்க வேண்டும் என பொதுப்பணித் துறை பொறியாளரை சந்திப்பதற்காக வந்தேன். தி.மு.க-வை வீழ்த்துவதற்காகக்கூட டி.டி.வி தினகரனை அதிமுக-வில் இணைத்துக்கொள்ள முடியாது. அவருடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை.
அதேபோன்று அவருடன் இணைவதற்கு அவசியமே இல்லை. இதற்கிடையில் நாங்கள் இணையும் அளவிற்கு டிடிவி, சசிகலா பெரிய சக்தி இல்லை. எனினும் டி.டி.வி தினகரன் வேண்டுமெனில் சசிகலா, ஓபிஎஸ் உடன் கூட்டணி வைத்துக் கொள்ளட்டும். அ.தி.மு.க மற்றும் தமிழக மக்களால் புறக்கணிப்பட்ட சக்திதான் சசிகலாவும், டிடிவி தினகரனும்” என்று அவர் பேசினார்.