இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் பல விருதுகளை பெற்றுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான “கூடல் நகர்” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனுராமசாமி. இவர் நீர்ப்பறவை, தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, கண்ணே கலைமானே மற்றும் இடம் பொருள் ஏவல் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெரும் இடத்தை பிடித்துள்ளார். மேலும், தனது இரண்டாவது படத்தில் தேசிய விருது பென்று சினிமாவில் தனக்கான இடத்தை பெற்றுள்ளார். இவர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி மற்றும் குரு சோமசுந்தரம் போன்ற நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளியான “மாமனிதன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், இவர் சர்வதேச திரைப்பட விழாக்களில் பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் நேற்று பிறந்த நாள் கொண்டாடி வரும் இயக்குனர் சீனுராமசாமிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து “மெஹந்தி சர்க்கஸ்” திரைப்படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், சீனுராமசாமிக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சீனுராமசாயின் அடுத்த படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் “மெஹந்தி சர்க்கஸ்” போலவே இப்படமும் ஒரு அழகான காதல் கதையாக இருக்கும் எனவும் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.