Categories
தேசிய செய்திகள்

இந்தியாவிற்கு அமெரிக்கா தரவுள்ள அபாச்சி ரக ஹெலிகாப்டரின் சிறப்பம்சங்கள்!

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடியுடன் டெல்லி இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்த இந்தியா-அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி – அதிபர் ட்ரம்ப் முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் ரூ.21 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்காவில் இருந்து எண்ணெய் ஏரிவாயு இறக்குமதி செய்ய ரூ.14,20,000 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளது. மேலும் அமெரிக்காவின் ராணுவ ஆயுதங்கள், அப்பாச்சி மற்றும் ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவிற்கு தர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன என்பது குறித்து இங்கு காண்போம்.

  • விமானத் தயாரிப்புக்கு பெயர்பெற்ற போயிங் நிறுவனம் ஹெலிகாப்டரை வடிவமைத்துள்ளது.
  • அப்பாச்சி ரக ஹெலிகாப்டரில் அதிவேகமாகச் சுழலும் நான்கு பிளேடுகள், இரண்டு எஞ்சின் போன்றவற்றை உள்ளது.
  • இதன் முன்புறத்தில் தாக்க வேண்டிய இலக்கை கண்டறிவதற்குப் பயன்படும் சென்சார், இரவு நேரத்தில் துல்லியமான காட்சிகளைக் காண உதவும் தொலைநோக்கி உள்ளன.
  • தரையிறங்கும் சக்கரங்களுக்கு நடுவே நவீனத் துப்பாக்கி மற்றும் ஏவுகணைகளை செலுத்துவதற்கான 4 ஏவுக்கருவிகள் ஆகியவை உள்ளன.
  • இருவர் அமர்ந்து செல்லும் வகையில் அபாச்சி ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் ஹெலிகாப்டரை இயக்கும் நேரத்தில் மற்றொருவர் ஆயுதங்களை பயன்படுத்தி இலக்கைத் தாக்கும் பணியில் ஈடுபடுவார்.
  • அபாச்சி ரக ஹெலிகாப்டரை இயக்குபவர்களுக்கு குறைந்தது இரண்டு ஆண்டுகள் கடுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • மணிக்கு 293 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட அபாச்சி ஹெலிகாப்டர் தொடர்ந்து 1200 குண்டுகளை சுடும் வலிமை பெற்றது.
  • பைலட் மற்றும் ஆயுதங்களை இயக்குபவர் ஆகிய இருவரின் ஹெல்மெட்டிலும் குறிபார்த்துச் சுடுவதற்குத் தேவையான தொலைநோக்கி உள்ளது.

அப்பாச்சி ஹெலிகாப்டர்களை அமெரிக்கா, கிரீஸ், ஜப்பான், இஸ்ரேல், நெதர்லாந்து, சிங்கப்பூர், சவூதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகளும் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது இந்தியாவும் இந்த ஹெலிகாப்டரை வாங்கவுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Categories

Tech |