Categories
சென்னை மாநில செய்திகள்

ரயிலில் தள்ளி மாணவி கொலை…. அதிர்ச்சியில் மாரடைப்பில் உயிரிழந்த தந்தை…. பெரும் சோக சம்பவம்….!!!!

சென்னை ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் சேர்ந்த சத்யஸ்ரீ என்ற 20 வயது கல்லூரி மாணவியும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற 23 வயது இளைஞர் காதலித்து வந்துள்ளனர்.இந்நிலையில் கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று தன் தோழி உடன் சத்யா ஸ்ரீ காத்திருந்த நிலையில் அங்கு வந்த சதீஸ் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சதீஷ் அந்த நேரம் தாம்பரத்திலிருந்து பரங்கிமலை ரயில் நிலையத்திற்குள் வந்த மின்சார ரயிலில் சத்யா ஸ்ரீயை தள்ளிவிட்டார். அதில் சிக்கிய அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு தப்பி ஓடிய சதீஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதனிடையே ஓடும் ரயில் முன்பு மகள் கொலை செய்யப்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு அந்த பெண்ணின் தந்தையும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Categories

Tech |