Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 பேட்டிங் தரவரிசை : தொடர்ந்து 2ஆவது இடத்தில் சூர்யா… 15 புள்ளி தான்…. ரிஸ்வானை முந்துவாரா?

சர்வதேச டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடிக்கிறார்..

இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பவர் சூர்யகுமார் யாதவ். இவர் தற்போது இந்திய அணியில் உச்சபட்ச பார்மில் இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்குச் சான்று அவர் டி20 பேட்டிங் தர வரிசையில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். ஆம், இந்தியாவின் மிஸ்டர் 360 என பலராலும் அழைக்கப்படும் சூர்யகுமார் யாதவ் கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார்.. வரும் உலகக் கோப்பை தொடரிலும் சூர்யா அசத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இந்த சூழலில் ஐசிசி ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது.

அதில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 புள்ளிகளுடன் தொடர்ந்து 2ஆவது இடத்தில் நீடிக்கிறார். முதல் இடத்தில் கடந்த முறையை போல பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் 853 புள்ளிகளில் இருக்கிறார். சூர்யகுமார் யாதவிற்கும் ரிஸ்வானுக்கும் இடையே 15 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது. எனவே அவர் வரும் டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி சூர்யகுமார் முதலிடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

சமீபத்தில் நடந்து முடிந்த தென்னாப்பிரிக்க தொடரில் சூர்யகுமார் தான் அதிக ரன்களை குவித்து இருந்தார். இந்திய வீரர்கள் யாருமே டாப் 10 தரவரிசையில் இல்லாத போது சூர்யா மட்டும் இரண்டாவது இடம் பிடித்திருப்பது அவர் பேட்டிங்கில் அந்த அளவிற்கு தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.
இவருக்கு அடுத்தபடியாக  இந்த டி20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களான கே.எல் ராகுல் 606 புள்ளிகளுடன் 13 வது இடத்திலும், முன்னாள் கேப்டன் விராட் கோலி 605 புள்ளிகளுடன் 14 வது இடத்திலும், கேப்டன் ரோஹித் சர்மா 604 புள்ளியுடன் 16வது இடத்திலும் இருக்கிறார்.

அதேசமயம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 3ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்க வீரர் எய்டன் மார்க்ரம் 4ஆவது இடத்திலும், நியூசிலாந்து வீரர் டெவன் கான்வே 5ஆவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் 6ஆவது இடத்திலும், ஆஸியின் ஆரோன் பிஞ்ச் 7ஆவது இடத்திலும், இலங்கையின் பதும் நிசாங்கா 8ஆவது இடத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முகமது வாசிம் 9ஆவது இடத்திலும், தென்னாப்பிரிக்காவின் குயிண்டன் டிகாக் 10ஆவது இடத்திலும் இருக்கின்றனர். இந்திய அணியில் பந்துவீச்சை பொறுத்த வரையில் டாப் 10 வரிசையில் யாரும் இடம் பெறவில்லை. புவனேஸ்வர் குமார் மட்டும் 13ஆவது இடத்தில் 638 புள்ளிகளுடன் இருக்கிறார்..

Categories

Tech |