சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். இந்த சீரியலுக்கு பிறகு ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் வாணி போஜன் வெள்ளி திரையில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வாணி போஜனுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் வாணி போஜன் நடிகை ஜெய்யுடன் லிவிங் டு கெதரில் இருப்பதாக சமீபத்தில் ஒரு சர்ச்சை பரவியது.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது புடவையில் அழகாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் நடிகை வாணி போஜன் வெளியிட்ட புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.