யானை தாக்கி வேட்டை தடுப்பு காவலர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள தட்டக்கரை வனச்சரகத்தில் கணேஷ் சுரேஷ் ஆகியோர் வேட்டை தடுப்பு காவலர்களாக வேலை பார்த்து வருகின்றனர். நேற்று மாலை 3 மணிக்கு இருவரும் காட்டுப்பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை வேட்டை தடுப்பு காவலர்களை துரத்தியது. இதில் யானை கீழே தள்ளியதால் சுரேஷுக்கு இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் புதருக்குள் தூக்கி வீசியதால் கனேஷுக்கு சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்த யானை காட்டுப்பகுதிக்குள் சென்றது. அவர்களது சத்தம் கேட்டு வந்த தட்டக்கரை ரேஞ்சர் பழனிச்சாமி மற்றும் வன காவலர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.