கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் இருக்கும் கல்குவாரியிலிருந்து எம்.சாண்ட் மணலை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை மிதுன் என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனர் இருந்துள்ளார். இந்நிலையில் ஓசூர் காந்தி நகர் அருகே சென்றபோது லாரியின் பின்பக்க டயர் வெடித்து திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனால் ஓட்டுநரும், கிளீனர் வாகனத்தை நிறுத்தி விட்டு உடனடியாக கீழே இறங்கினர். சிறிது நேரத்தில் லாரி முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அதிக பாரம் ஏற்றி வந்ததன் காரணமாக டயர்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது.