முதல்வர் மு க ஸ்டாலின் திமுக தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனையொட்டி மதுரையில் அக்கட்சியினருக்கு விருந்தளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆதரவாளர்கள் மட்டும் கலந்து கொண்டதாகவும், மற்ற திமுக எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஸ்டாலின் பேச்சையும் மீறி கட்சியில் சிலர் செயல்படுவது வேதனை அளிக்கிறது.
தலைவருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை சிலர் புறக்கணித்ததோடு வேறு யாரும் பங்கேற்க கூடாது என்று மிரட்டல் விடுத்தது ஆச்சரியம் அளிக்கிறது. மேலும் தன்னால் பயனடைந்து செய்நன்றி மறந்தவர்கள் சிலர் உள்ளதாகவும் அவர்களுக்கு ஒரு நாள் வீழ்ச்சி ஏற்படும் எனவும் பேசியதால் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.